ஒரு பெரிய போர்;அரையிறுதியில் நடால் – ஜோகோவிச் மோதல்…!

  • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் அரை இறுதி போட்டிக்கு,ஸ்பெயின் ஜாம்பவான் ரபேல் நடால் மற்றும் செர்பிய சாம்பியன் ஜோகோவிச் முன்னேறியுள்ளனர்.
  • இதனால்,அரை இறுதியில் கடும் மோதல் நிலவும் என எதிர்பார்க்கபடுகிறது.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது.இதில்,பிரஞ்சு ஓபன் டென்னிஸின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் அரை இறுதிக்கு முன்னேறினார்.

அதாவது,பாரீசில் நடந்த கால் இறுதி போட்டியில் செர்பிய சாம்பியன் ஜோகோவிச்,இத்தாலி இளம் வீரர் மேட்டோ பிரட்னீயை எதிர்கொண்டார். எனினும்,ஜோகோவிச் தனது சிறப்பான ஆட்டம் மூலமாக இறுதியில் 6-க்கு 3, 6-2, 6-7, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

அந்த வகையில்,13 முறை வெற்றியாளரான ஸ்பெயின் ஜாம்பவான் ரபேல் நடால்,அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மானை 6-3, 4-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 14 வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதனால்,பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் ரபேல் நடால்,செர்பிய சாம்பியன் ஜோகோவிச் இடையே கடும் மோதல் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து,நோவக் ஜோகோவிச் கூறுகையில்,”58 வது முறையாக ரஃபேல் நடாலை எதிர்கொள்வதும்,பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் ஒரு இடத்தைப் பெறுவதும் என்பது ஒரு மிகப் பெரிய போட்டியாளருக்கு எதிரான ஒரு பெரிய போராக இருக்கும்”, என்று கூறினார்.