கேரளாவில் ஜூன் 1ல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்.!

தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ல் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு

By balakaliyamoorthy | Published: May 29, 2020 11:14 AM

தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ல் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்றுடன் அக்னி நட்சத்திர காலம் முடிந்தது. அதிகபட்சமாக நேற்று திருத்தணியில் 109 டிகிரி வெயில் கொளுத்தியது. எனினும், வெப்ப சலனம் காரணமாக உள்தமிழகம், மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென்தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகின்றனர். 

இந்தநிலையில், வருகின்ற 31 ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதால் கேரளா மற்றும் தென் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை வரும் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே மத்திய மேற்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஏமனை நோக்கி நகரும் என்பதால் மத்திய கிழக்கு மற்றும் வடமேற்கு தென்கிழக்கு அரபிக்கடலுக்கு மீனவர்கக்ள் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் முந்தைய காலங்களில் ஜூன் 5 ல் தான் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருந்த நிலையில், தற்போது 1 ஆம் தேதி தொடங்குறது.

Step2: Place in ads Display sections
  • TAGS

unicc