பார்வையாளர்களாக மாறிய செக்ஸ் பொம்மைகள்.! மன்னிப்புகோரிய கால்பந்தாட்ட அணி.!

தென் கொரியாவில் தொழில்முறை கால்பந்தாட்ட போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை. மாறாக மேனிக்வின் எனப்படும் செக்ஸ் பொம்மைகள் ரசிகர்களை போல மைதானத்தில் அமர வைக்கப்பட்டன.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. மேலும், சர்வதேச அளவில் முக்கிய விளையாட்டு போட்டிகள் நடைபெறாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.    

இருந்தாலும், தென்கொரியாவில் கால்பந்தாட்ட போட்டித்தொடர் நடைபெற்றது. அந்நாட்டில் தொழில்முறை கால்பந்து போட்டி நடைபெற்றது. எஃப்.சி. சியோல் கால்பந்தாட்ட கிளப் சார்பாக இந்த போட்டி நடைபெற்றது. 

இதில் அந்த கால்பந்தாட்ட தொழில்முறை போட்டி தொடரின் நடப்பு சாம்பியனான ஜியோன்புக் மோட்டார்ஸ் அணியானது, தென்மேற்கு நகரமான ஜியோன்ஜூவில் சுவான் ப்ளூவிங்ஸ் அணியை 1-0 என்கிற கோல் கணக்கில் வெற்றிகொண்டது.

இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை. மாறாக மேனிக்வின் எனப்படும் செக்ஸ் பொம்மைகள் ரசிகர்களை போல மைதானத்தில் அமர வைக்கப்பட்டன. இதனை கண்டு, கால்பந்தாட்ட ரசிகர்கள் கோபமாயினர். 

அவர்கள் கோபத்தை இணையத்தின் வாயிலாக திட்டி தீர்த்தனர். இதனை கண்டு விழா ஏற்பாட்டாளரான கே-லீக் நிர்வாகம் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.