விரைவில் SKவின் ‘வருத்தப்படாத’ ரஜினிமுருகன் யுனிவர்ஸ்… வெளியான அதிரிபுதிரி மாஸ் அப்டேட்…

இயக்குனர் பொன்ராம்  நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில் முதலில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்திருந்தார். இந்த வெற்றியை தொடர்ந்து பொன்ராம் -சிவகார்த்திகேயன் கூட்டணி  “ரஜினிமுருகன்” திரைப்படத்தில் இணைந்தனர்.

Rajinimurugan Climax
Rajinimurugan Climax Image Source Twitter

இந்த திரைப்படமும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார். மேலும் படத்தின் இறுதிக்காட்சியில் போஸ் பாண்டி கதாபாத்திரமும், ரஜினிமுருகன் கதாபாத்திரமும் அண்ணன் தம்பி என கட்டப்பட்டிருக்கும்.

இதையும் படியுங்களேன்- தமிழ் சினிமாவால் மறக்க முடியாத மாஸ் கம்பேக்.! சிம்புவின் “மாநாடு” மட்டும் ஏன் இவ்வளவு ஸ்பெஷல்.?

Rajini Murugan 2
Rajini Murugan 2 Image Source Twitter

இதனால் பலரும் ரஜினி முருகன் 2 உருவாகுமா என ஆவலுடன் காத்திருந்த நிலையில். அதற்கான சூப்பர் அப்டேட்டை இயக்குனர் பொன்ராம் கொடுத்துள்ளார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய பொன்ராம் ”  ரஜினிமுருகன் படத்தின் கடைசி காட்சியில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் போஸ் பாண்டி கதாபாத்திரம் இடம்பெறுவது போல் காட்டி இருப்பேன்.

Ponram Sivakarthikeyan
Ponram Sivakarthikeyan Image Source Twitter

எனவே, ரஜினிமுருகன் 2  பாகத்திற்கான வேலைகள் தான் தற்போது விறு விறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் 2 சிவகார்த்திகேயன், 2 சூரி,நடிகைகள் ஸ்ரீதிவ்யா, கீர்த்தி சுரேஷ் நடிகர்கள் சத்யராஜ், ராஜ்கிரண்  இந்த கம்போவை மையமாக வைத்து நான் கதை தயார் செய்து வருகிறேன். இதைப்பற்றி சிவகார்த்திகேயன் சாரிடமும் கூறியுள்ளேன். அவரும் நன்றாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அவருடைய நேரமும் என்னுடைய நேரமும் சரியாக வரும்போது இந்த படத்தை பண்ணுவோம்” என கூறியுள்ளார் இயக்குனர் பொன்ராம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment