முதன் முறையாக மாநிலங்களவை எம்.பியாக தேர்வானார் சோனியாகாந்தி.!

250 உறுப்பினர்களைக் கொண்ட ராஜ்யசபாவின் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். இந்த ஆறு ஆண்டுகள் முடிந்து தற்போது 56 மாநிலங்களவை (ராஜ்ய சபை) எம்பி இடங்கள் காலியாக உள்ளன. இந்த ராஜ்ய சபா எம்பிக்களை மாநில எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுப்பர்.

ஆளும் கட்சிக்கு அதிக மாநிலங்களவை உறுப்பினர்களும், எதிர்க்கட்சிகளுக்கு குறைவான ராஜ்யசபா உறுப்பினர்களும், மற்ற கட்சிகளுக்கு அவர்களின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையை வைத்து மாநில ராஜ்யசபா எம்பி சீட் நிர்ணயம் செய்யப்படும்.

ராமர் கோவில் திறப்புக்கு ஜனாதிபதியை அழைக்காததற்கு இதுவே காரணம்: பாஜக அரசு மீது ராகுல் காந்தி கடும் தாக்கு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், ரேபரேலி தொகுதி எம்பியாக இருந்த சோனியா காந்தி இதுவரையில் மக்களவை உறுப்பினராக 1999 முதல் செயல்பட்டு வருகிறார். தற்போது முதன்முறையாக ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

வயது மூப்பு காரணமாக மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்பதை முன்னரே சோனியா காந்தி அறிவித்துவிட்டார். இதனை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்பியாக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். இதற்கான வேட்பு மனுவை அண்மையில் சோனியா காந்தி தாக்கல் செய்து இருந்தார்.

தற்போது, அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ராஜஸ்தான் மாநில தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார். மேலும், பாஜகவின் சன்னிலால் கிராசியா, மதன் ரத்தோர் ஆகியோரும் ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்பி ஆக தேர்வாகியுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment