ரஜினியின் “லிங்கா” பட நாயகியை வருத்தெடுக்கும் ரசிகர்கள் !

சோனாக்ஷி சின்ஹா ​​ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பாலிவுட் சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்கிறார். இவர் 2014ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ரஜினிக்கு ஜோடியாக “லிங்கா” படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வரும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இதில் அவரிடம் அனுமன் சஞ்சீவி மூலிகையை யாருக்காக கொண்டு சென்றான் என கேட்கப்பட்டது.

அதற்கு சோனாக்ஷி முதலில் ராமன் பின் சீதை என தவறான பதிலை சொன்னார். அதே சமயத்தில் போன் அழைப்பு மூலம் லக்‌ஷ்மன் என சரியான பதிலை கூறினார். இதை கண்ட ரசிகர்கள் பிரபல நடிகையை கேளி கிண்டல் செய்யத் தொடங்கினர்.

author avatar
Vidhusan