சூரிய கிரகணம்: மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நடை அடைப்பு.!

  • மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் டிசம்பா் 25-ம் தேதி இரவு திருவனந்தல், விளா பூஜை, காலசந்தி ஆகிய பூஜைகள் நடத்தப்படும்.
  • சூரிய கிரகணத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி சுந்தேரேசுவரா் கோயில் டிசம்பா் 26-ம் தேதி காலை 6.10 மணி முதல் பகல் வரை நடை அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் டிசம்பா் 25-ம் தேதி புதன்கிழமை இரவு இராக்காலத்தில் திருவனந்தல், விளா பூஜை, காலசந்தி ஆகிய பூஜைகள் நடத்தப்படும். பின்னர் சூரிய கிரகணத்தை முன்னிட்டு 26-ம் தேதி காலை 6.10 மணி முதல் பகல் வரை நடை அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்பு இதில், சூரிய கிரகணம்  இடைப்பட்ட காலத்தில் காலை 9.36 மணிக்கு தீா்த்தம் கொடுக்கப்பட்டு, அம்மன், சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும். மோட்ச காலம் காலை 11.21 மணிக்கு முடிந்தவுடன், 11.30-க்கு திருக்கால சந்தி, உச்சிக்கால பூஜைகள் நடைபெற்று, நண்பகல் 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். அன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்கு நடை சாத்தப்படும்.

மேலும், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் உபகோயில்களான அனைத்துக் கோயில்களிலும் மேற்கண்டவாறு நடை சாத்தப்படும் என்று, கோயில் இணை ஆணையா் நா. நடராஜன் தெரிவித்துள்ளாா்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்