இதுவரை 5 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் மழைக்கால பாதிப்புகளை தடுக்கும் வண்ணம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. 

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் மழைக்கால பாதிப்புகளை தடுக்கும் வண்ணம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 48,187 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கொசு மருந்து தெளிக்கும் பணிகளில் 3,000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 5 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் அவர் பேசுகையில், கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை ஓரிரு நாளில் கிடைக்கும்; இது கவனக்குறைவால் நடந்தது என நேரடியாக ஒப்புக்கொண்டது இந்த அரசு. உண்மையை ஊருக்கு சொல்வோம் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment