இந்தியாவில் இதுவரை 39.40 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது – ICMR!

இந்தியாவில் இதுவரை 39.40 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருட காலமாக உலகையே வாட்டி வதைத்து வரும் கொரோனா வைரஸ் கடந்த வருடத்தை விட இந்த வருடம் இந்தியாவில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா முதல் அலையை விட இந்த ஆண்டு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழப்புகளும் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளையும் கடுமையான ஊரடங்கையும் அறிவித்ததை அடுத்து தற்போது கொரோனா இந்தியாவில் கட்டுக்குள் வந்துள்ளது.

மேலும், கொரோனாவை தவிர்க்கும் விதமாக தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் ஜூன் 21ஆம் தேதி வரை 39,40,72,142 பேருக்கும் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், நேற்று மட்டும் இந்தியாவில் 16,64,360 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

author avatar
Rebekal