ஆப்கானிஸ்தானிலிருந்து இதுவரை 1,09,200 பேர் மீட்கப்பட்டுள்ளனர் – அமெரிக்கா தகவல்!

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 14-ஆம் தேதி முதல் தற்போது வரை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 200 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் மற்றும் அந்நாட்டில் இருந்த பிற நாட்டு மக்கள் அனைவரும் அவசர அவசரமாக பிற நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்கும் பணியில் ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

மேலும், ஆப்கானிஸ்தானில் வரும் 31-ஆம் தேதிக்குள் மீட்பு நடவடிக்கைகளை முடித்து அமெரிக்க படைகள் வெளியேறிவிட வேண்டும் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கானியர்கள் மற்றும் தங்கள் நாட்டினர் அனைவரையும் அமெரிக்கா மீட்டு வருகிறது. இதனை அடுத்து கடந்த 14-ம் தேதி முதல் தற்போது வரை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 200 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal