விக்ரஹா ரோந்து கப்பல் நாட்டின் சேவைக்கு அர்ப்பணிப்பு..!

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று விக்ரஹா ரோந்து கப்பல் சேவையை தொடங்கி வைத்தார்.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கடல் ரோந்து கப்பலான விக்ரஹாவை, இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல்கள் வரிசையில் சேர்க்கப்பட்டது. லார்சன் & டூப்ரோ ஷிப் பில்டிங் லிமிடெட் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டுள்ள இக்கப்பலில் நவீன தொழில்நுட்ப ராடார்கள், தொலைதொடர்பு மற்றூம் பயணக்கருவிகள், சென்சார்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று ரோந்து கப்பல் சேவையை தொடங்கி வைத்தார். இந்த கப்பல் ஒரு ஹெலிகாப்டர் மற்றும் 4 அதிவேக படகுகளை சுமந்து செல்லும். இந்த கப்பல் 98 மீட்டர் நீளம் கொண்டது. அதில் 11 அதிகாரிகள் மற்றும் 110 மாலுமிகள் இருப்பார்கள். இந்த கப்பலுடன் சேர்த்து 157 கப்பல்கள் மற்றும் 66 விமானங்கள் இந்திய கடலோர காவல் படையிடம் உள்ளன.

author avatar
murugan