வட மாநிலங்களில் நிலவிவரும் பனிமூட்டம்!தொடர்ந்து அதிகரிக்கும் ,வானிலை ஆய்வும் மையம் தகவல்!

  • இந்தியாவின் தலைநகரான டெல்லி உட்பட பல மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது.
  • தொடர்ந்து மேலும் பனிமூட்டம் அதிகமாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வட மாநிலங்களான ஜம்மு,காஷ்மீர் ,இமாச்சலப் பிரதேசம்,பஞ்சாப், அரியானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் குளிர் நிலவிவருகிறது.இதன் எதிரொலியாக ரயில், மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

பனிமூட்டத்தால், ரயில்களின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.இவ்வாறு ரயில்களின் இயக்கத்தில் ஏற்பட்டிருக்கும் தாமதத்தை பொறுத்து கொள்ளுமாறு பயணிகளை ரயில்வே துறை கேட்டுக்கொண்டிருக்கிறது.

மேலும் இந்த பனி மூட்டத்தின் காரணமாக கொல்கத்தா,ஹைதராபாத், டெல்லி பகுதிகளுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் டெல்லியில் வரும் நாட்களில் பனி மூட்டம் இன்னும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.