1.5 கோடி மதிப்புடைய விஷத்தை கடத்திய மர்ம கும்பல்.. மடக்கி பிடித்து சிறையில் அடைப்பு…

  • பாம்பு விஷத்தை கடத்திய  கும்பல்.
  • காவல்துறை பிடித்து சிறையில் அடைப்பு.

இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் பாம்புகளின் விஷம் பெரும் மதிப்பை பெற்றுள்ளன.  இந்த பாம்பின் விஷத்தை கொண்டு பல்வேறு மருந்துப்பொருள்களை உருவாக்குகின்றனர். அதிலும் குறிப்பாக பாம்புக்கடிக்கு மருந்தாகப் பயன்படும் கோப்ராக்சின் எனும் மருந்துப்பொருள் இந்த பாம்பின் விஷத்தின் மூலமே உருவாக்குகின்றனர். இதனால் இதற்க்காக அரசின் சார்பில் பல்வேறு பாம்பு பண்ணைகள் மூலம் இந்த நஞ்சுகள் சேகரிக்கப்படுகின்றன. இந்நிலையில், மேற்கு வங்கம் மாநிலம்  மால்டா மாவட்டத்தில் பாம்பு விஷம் விற்கப்பட இருப்பதாக காவல்துறையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் படி, இங்கிலீஷ் பஜார் டவுனில்  காவல் துறையினர் அதிரடி  சோதனை நடத்தினர். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்த கலியாசாக் பகுதியை சேர்ந்த ரபீக் அலி, ஆஷிக் மண்டல், மசூத் ஷேக் ஆகியோரிடம் இருந்து பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்  சர்வதேச சந்தை மதிப்பு  ரூ.1.5 கோடி என கணக்கிடப்பட்டு உள்ளது. மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த பாம்பு விஷம் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Kaliraj