வழக்குகளை வாபஸ் பெறுகிறோம் என்ற நாடகத்தினால் பாவங்களை கழுவ முடியாது – ஜவஹருல்லா

அதிமுக அரசு, வழக்குகளை வாபஸ் பெறுகிறோம் என்ற நாடகத்தினால் பாவங்களை கழுவ முடியாது.

தமிழ்நாடு முழுவதும், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தது. இந்த போராட்டத்தின் போது சட்ட ஒழுங்கு சீர்குலைவை தடுக்க பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.  இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹருல்லா சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், சி.ஏ.ஏ. சட்டம் வருவதற்கு காரணமாக இருக்கக்கூடிய அதிமுக அரசு, வழக்குகளை வாபஸ் பெறுகிறோம் என்ற நாடகத்தினால் பாவங்களை கழுவ முடியாது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.