அவன் ஒரு லூசு, ஃபிராடு! அவன பத்தி பேசுனா டைம் வேஸ்ட்! நித்யானந்தாவை கிழித்தெறிந்த தமிழ் ஹீரோ!

  • தற்போது பல சர்ச்சைகளில் சிக்கி போலிஸாரால் தேடப்பட்டு வருகிறார் நித்தியானந்தா. 
  • இவர்பற்றி அண்மையில் நடிகர் சித்தார்த் பேசுகையில் அவன் ஒரு லூசு, ஃபிராடு என திட்டி தீர்த்துள்ளார். 

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நல்ல நடிகராக அறியப்பட்டவர் நடிகர் சித்தார்த். இவர் நடிப்பில் அண்மையில் சிவப்பு மஞ்சள், பச்சை, அருவம் ஆகிய படங்கள் நல்ல வெற்றியை பெற்றன. இவர் அண்மையில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டு பேசுகையில்,

நித்யானந்தாவின் கைலாஷ் நாடு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு சித்தார்த் மிகவும் எரிச்சலுடன், ‘ அவன் ஒரு லூசு, ஃபிராடு அவனை 15 வருசத்துக்கு முன்னாடி ஒரு ஏர்போர்ட்ல பார்த்தேன் அப்போவே தெரியும் அவன் பெரிய பிராடு. அவன் அப்போலேருந்தே அப்டித்தான் பேசிகிட்டு திரியிறான் உளறுவான். அவன பத்தி பேசுனா நமக்குத்தான் டைம் வேஸ்ட். ‘ என கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.