துப்பாக்கிச் சூடு சம்பவம் – திமுக எம்எல்ஏ இதயவர்மனிடம் விசாரணை

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ இதயவர்மனிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே துரைப்பாக்கம் பகுதியை சார்ந்த தாண்டவமூர்த்தி மற்றும் அவரது சகோதரர் குமார் ஆகியோர் கோவில் நிலத்தில் சாலை அமைக்க 50 பேருடன் வந்துள்ளனர். அப்போது, திமுக எம்.எல்.ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி மற்றும் ஊர் பொதுமக்கள் தடுத்து நிறுத்திய போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் நடந்தது.

இதையடுத்து, லட்சுமிபதி துப்பாக்கியால் சுட்டபோது ஒரு குண்டு காரிலும் மற்றொரு குண்டு ஸ்ரீனிவாசன் என்பவர் முதுகில் பட்டதாக கூறப்படுகிறது. பின்னர்,  சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் உட்பட  13 பேரும், எதிர்தரப்பில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

 நேற்று  எம்.எல்.ஏ இதயவர்மனை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்பொழுது ,இதயவர்மனை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தாக்கல் செய்தது.இதனையடுத்து இதயவர்மனை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது.இந்நிலையில் சம்பவம் நடத்த பகுதியான செங்காடுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.மேலும் அவரது அலுவலகம் உள்ளிட்ட  இடங்களுக்கு சென்றும் விசாரணை மேற்கொண்டனர் காவல்த்துறையினர்.