அதிர்ச்சி : தமிழகத்தில் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி…!

நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை  வருவதாகவும்  மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் இரு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓமைக்ரான் உறுதியான நபருடன் தொடர்பில் இருந்த 7 பேரின் மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓமைக்ரான் தொற்று உறுதியான நபரோடு விமானத்தில் வந்தவர்கள், தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இந்தியாவை  பொறுத்தவரையில், இதுவரை 10 மாநிலங்களில், 69 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.