அதிர்ச்சி : ஒரே நாளில் கோடிக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஒரே நாளில் சீனாவில் கிட்டத்தட்ட 3.7 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சீனாவின் உஹான் மாகாணத்தில் தான் முதன்முதலாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இந்த தொற்று கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக அனைத்து நாடுகளிலும் தனது தீவிர தாக்குதலை நடத்தி வந்த நிலையில், சமீப காலமாக தொற்று பாதிப்பு குறைந்து இருந்தது.

இந்த நிலையில் சீனா, அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகளில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.  சீன அரசாங்கத்தின் உயர்மட்ட சுகாதார ஆணையத்தின் கணிப்பின்படி ஒரே நாளில் சீனாவில் கிட்டத்தட்ட 3.7 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அதிலும் சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணம் மற்றும் தலைநகர் பெய்ஜிங்கில் தான் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment