பெரிய நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் சிவாங்கி.! படப்பிடிப்பில் என்னென்ன செய்றாங்க பாருங்க

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக நடிகைகள் மற்றும் நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் நடித்து, அந்த படம் ஹிட் ஆன பின்பு சிலரது நடவடிக்கைகளில் மாற்றம் வந்துவிடும். அதாவது, தனக்கென தனி கேரவன் வேணும், அந்த வசதி வேணும் என்று கேட்பார்கள்.

குக் வித் கோமாளி நிகழ்வில் பங்கேற்று லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த நடிகை சிவாங்கி ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அந்த படமும் ஹிட்டாகி விட்டது. இதனால், தற்போது ஒரு படத்திற்கு நடிக்க செல்கிறார் என்றால் அதற்கு என் பாதுகாப்புக்காக என் குடும்பமும் வரும். அதற்கான செலவு, நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் கண்டிஷன் போடுகிறாராம்.

மேலும், வெளி ஊரில் ஷூட்டிங் என்றால் அதற்கு சிவாங்கி மற்றும் அவரது குடும்பத்தினரின் விமான டிக்கெட் முதல் சாப்பாடு என தங்கும் இடம் வரை தயாரிப்பாளரே பார்க்க வேண்டும் என்று சிவாங்கி கண்டிஷன் போட்டு நடித்து வருகிறாராம். அதேபோல், ஒரு படங்களில் நடிக்க வருவதற்கு, தன்னுடன் மேக்கப் கலைஞர்களையும் அழைத்து வருவதோடு, அதற்கான மொத்த செலவுகளையும் தயாரிப்பாளர் தலையில் போட்டு விடுகிறாராம்.

இதையும் படியுங்களேன்- அந்த கண்ணு குழி’ தாங்க உங்கள எங்கயோ… கொண்டு போக போது.! சிரிப்பில் மயங்கிய ரசிகர்கள்…

அந்த வகையில், இவர் அழைத்து வரும் மேக்கப் கலைஞர்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு மட்டும் ரூ.15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கொடுக்க வேண்டி இருக்கிறதாம். தற்போது இதனை பார்த்து நெட்டிசன்கள், நீங்க இன்னும் சினிமாவில் பெரிதாக வளரவே இல்ல. அதுக்குள்ள இவ்வளவு கண்டிஷன் போடுறீங்களே என்று காட்டத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment