சாஸ்த்ரா பல்கலை. நீர்நிலையில் அமைந்துள்ளதா? – ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு

வழக்கு முடியும் வரை கல்வி நிறுவன கட்டிடம் உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் என உத்தரவு.

தஞ்சை சாஸ்த்ரா கல்வி நிறுவனம் நீர்நிலையில் அமைந்துள்ளதா? என்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு முடியும் வரை கல்வி நிறுவன கட்டிடம் உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

நீர்நிலையில் அமைந்துள்ளதால் மாற்று இடம் வழங்க அனுமதிக்கும் அரசாணை பொருந்தாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பு அகற்ற செல்லும்போது முதலில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுக்க மக்கள்  வலியுறுத்தியதாகவும் அரசு தரப்பில் கூறியுள்ளது. எனவே, சாஸ்த்ரா கல்வி நிறுவனம் தொடர்ந்த வழக்கை ஆக.25க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment