பிரபல சீனா சிமெண்ட் நிறுவனமான தியான்ருய் குரூப் பங்குகள் 99% சரிவு.!

இன்றைய பங்குச்சந்தை (செவ்வாய்க்கிழமை) வர்த்தகத்தின் இறுதி 15 நிமிடங்களில் பிரபல சீன சிமென்ட் உற்பத்தியாளரான தியான்ருயின் பங்குகள் திடீரென 99% சரிந்தது. இது அதன் சந்தை  மதிப்பீட்டில் சுமார் 18 பில்லியன் டாலர் நஷ்டமாகியதாக கணக்கிடப்பட்டுள்ளது.

Chinese Cement
Chinese Cement file image
அதாவது இந்திய மதிப்பீட்டின் படி, சுமார் 15 ஆயிரம் கோடியாகும். இந்த கடும் சரிவுக்கு காரணம், சீனாவில் ரியல் எஸ்டேட் சரிவு, சந்தையில் அதிகரித்த போட்டி மற்றும் அதிக மூலப்பொருள் ஆகியவற்றைத் தொடர்ந்து பலவீனமான செலவுகள் தேவையாக இருக்கலாம் என  United Kingdom செய்தி நிறுவனமான CemNet மேற்கோளிட்டுள்ளது.

தியான்ருய் குரூப் பங்குகள் கடும் சரிவை தொடர்ந்து, ஹாங்காங்கில் அந்நிறுவனத்தின் சிமென்ட் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. மத்திய ஹெனான் மாகாணத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் பங்குகள் 76% சரிவதற்கு முன், ஹாங்காங் பென்னி பங்கு Xinji Shaxi-ன் வர்த்தகம் இடைநிறுத்தப்பட்டது.

தியான்ருய் குரூப் 2007 ஆம் ஆண்டில் அமெரிக்க தனியார் பங்கு நிறுவனமான KKR இன் முதல் பிரதான சீனா முதலீடாக இருந்தது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.