உலகக்கோப்பையில் அதிவிரைவாக 25 விக்கெட்டை வீரர்களில் ஷமி முதலிடம் !

கடந்த 27-ம் தேதி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட்  மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ,வெஸ்ட் இண்டீஸ் அணி மோதியது .இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கியவெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்கள் எடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் முகமது ஷமி 4  விக்கெட்டை பறித்து இந்திய அணி வெற்றி பெற பெரும் உதவியாக இருந்தார்.இந்நிலையில் உலகக்கோப்பையில் அதிவிரைவாக 25 விக்கெட்டை வீழ்த்திய வீரர்களில் முகமது ஷமி முதலிடத்தில்  உள்ளார்.
ஷமி உலகக்கோப்பையில் ஒன்பது போட்டிகளில் விளையாடி அதிவிரைவாக 25 விக்கெட்டை வீழ்த்தி இந்த சாதனையை படைத்து உள்ளார்.
ஷமி – 9 *
ஸ்டார்க் – 10
போல்ட் – 11
தாஹிர் – 11
சவுதி – 11
மலிங்கா – 12
இம்ரான் – 12
எஸ் டைட் – 12
எஸ் பாண்ட் – 13
லீ – 13

author avatar
murugan