சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா? – அமைச்சர் சேகர்பாபு

சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா? அமைச்சர் சேகர்பாபு பதிலடி. 

நேற்று சென்னை கலைவாணர் அரங்கில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்ட நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

seeman ntk

அப்போது பேசிய அவர், பேனா சின்னம் நிறுவதை தடுத்து நிறுத்தும் வரை போராடுவேன். கடலுக்குள் பேனா சிலை வைத்தால் சுற்றுசூழல் பாதிக்கப்படும் என்றும் மெரினா கடலில் பேனா நினைவு சின்னத்தை வைத்தால் உடைப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

sekarbabu minister

சீமானின் கருத்துக்கு திமுக தரப்பில் கண்டன்னகள் வலுத்து வரும் நிலையில், இதுகுறித்து அமைச்சர் சேகர் பாபு அவர்கள், சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா?. எல்லாருக்கும் கை இருக்கு.. இந்த பதிலே அவருக்கு போதும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment