சேது சமுத்திரம் திட்டம் – ஓபிஎஸ் பேச்சு

சாதக, பாதகங்களை ஆராய்ந்து சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பேரவையில் முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் மீது ஓபிஎஸ் பேச்சு.

தமிழக சட்டப்பேரவையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானம் மீது பேரவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, சேது சமுத்திர திட்டம் தீர்மானம் குறித்து பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், சாதக, பாதகங்களை ஆராய்ந்து சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

கடந்த காலங்களில் நிலைப்பாடுகள் மாற்றியிருக்கலாம், அதுபற்றி தற்போது பேச வேண்டியதில்லை. இந்த திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது யார் என்பது குறித்து செல்வந்தகை குற்றச்சாட்டு முன்வைத்ததற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. தோண்டப்பட்ட பள்ளத்தை மீண்டும் மீண்டும் மணல் முடியதாலேயே திட்டம் குறித்து ஆய்வு செய்ய ஜெயலலிதா வலியுறுத்தினார் எனவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆதரித்துவிட்டு பின்னர் எதிர்த்தார் என முதல்வர் ஸ்டாலின் கூறிய கருத்துக்கு பன்னீர்செல்வம் பதில் அளித்தார். இதன்பின், சட்டமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்ற நிலையில், சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment