அரசு விளம்பரங்களில் வெளியிடப்பட்ட அரசியல் விளம்பரங்கள்.. ஆம் ஆத்மி கட்சிக்கு ₹163 கோடி அபராதம் ..!

அரசு விளம்பரங்களில் வெளியிடப்பட்ட அரசியல் விளம்பரங்கள் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி ₹163 கோடி செலுத்த டெல்லி அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புது டெல்லி அரசின் தகவல் மற்றும் விளம்பர இயக்குனரகம் (டிஐபி) அரசு விளம்பரங்களின் மூலம் அரசியல் விளம்பரங்களை வெளியிட்டதாகக் கூறி ஆம் ஆத்மி கட்சிக்கு ₹163.62 கோடி வசூலிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனா, அரசு விளம்பரங்கள் என்ற போர்வையில் வெளியிட்ட அரசியல் விளம்பரங்களுக்காக, ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ரூ. 97 கோடியை வசூலிக்குமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

மேலும் 10 நாட்களுக்குள் இந்த தொகையை செலுத்த வேண்டும் டெல்லி லெப்டினன்ட் கவர்னர் கூறியுள்ளார். ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அவ்வாறு செய்யத் தவறினால், வி.கே.சக்சேனாவின்  முந்தைய உத்தரவின்படி, கட்சியின் சொத்துக்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மார்ச் 31, 2017 வரை அரசியல் விளம்பரங்களில் முதன்மைத் தொகையாக ரூ.99,31,10,053 (ரூ. 99.31 கோடி) செலுத்துவதற்கு இருக்கும் போது, மீதமுள்ள ரூ. 64,30,78,212 (ரூ. 64.31 கோடி) இந்தத் தொகைக்கான செலுத்த தவறியதற்கான அபராத வட்டி ஆகும்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment