தீர்ப்பாயத்தின் 5 அமர்வு: நாடு முழுவதும் உத்தரவு பொருத்தும் – உயர்நீதிமன்றம்

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் 5 அமர்வுகளில் பிறப்பிக்கும் உத்தரவுகள் நாடு முழுவதும் பொருந்தும் என்று சென்னை உய்ரநீதிமன்றம் கருத்து. 

டெல்லியில் முதன்மை அமர்வு பிறப்பிக்கும் உத்தரவுதான் நாடு முழுவதும் பொருந்தும் என கூற முடியாது என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் 5 அமர்வுகளில் பிறப்பிக்கும் உத்தரவுகள் நாடு முழுவதும் பொருந்தும் எனவும் சென்னை உய்ரநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

நிலக்கரி இறக்குமதிக்கு சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு தேவையில்லை என்ற அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது தொடர்பான உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதற்குமான வழக்கு எனக்கூறி முதன்மை அமர்வுக்கு மாற்றிய உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

டெல்லி வரை சென்று அதிக செலவு ஏற்படக்கூடாது என்பதற்காகவே 5 அமர்வுகள் உள்ளன. டெல்லி தீர்ப்பாயம் பிறப்பிக்கும் உத்தரவை மட்டும் நாடு முழுவதும் பின்பற்றினால் அது நீதியை மறுப்பதற்கு சமம் என்றும் மக்களுக்கு நீதி வழங்கவே தாலுகா அளவில் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்