சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 2 ஆக பிரிப்பு – சட்ட மசோதா தாக்கல்.!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இறுதி நாளான இன்று நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சென்னை அண்ணா அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிப்பதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.

அதில், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா தொழில்நுட்பம் ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் பிரிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகம் நிர்வகிக்கும் என்றும் அண்ணா தொழில்நுட்பம் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் தனியாக செயல்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்