தமிழகத்திற்கு தனி கல்வி திட்டம்…! அமைச்சர் பொன்முடி அதிரடி…!

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்திய திணிக்க பார்க்கிறார்கள் என அமைச்சர் பொன்முடி பேச்சு. 

வேலூர் முத்துரங்கம் அரசினர் கலை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் இந்த கல்லூரியில் தற்போது மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகமாக படித்து வருகின்றனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை இரு கண்கள் ஆக நினைத்து செயல்பட்டு வருகிறார். நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் நீங்கள் முதல்வராக வேண்டும் என்பதல்ல. உங்கள் துறையில் நீங்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான்.

நாங்கள் படிக்கின்ற காலத்தில் பெண்கள் குறைந்த அளவில் தான் உயர் கல்வி படிக்க முடிந்தது. ஆனால் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் முயற்சியால் தற்போது பெண்கள் உயர்கல்விகளில் அதிகமாக சேர்ந்து படித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்திய திணிக்க பார்க்கிறார்கள். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் நமக்கு போதும். விருப்பப்பட்டவர்கள் இந்தியை படிக்கலாம் என்றும், தமிழகத்திற்க்கென தனி கல்வி கொள்கையை ஏற்படுத்த முயற்சிகளை முதல்வர் மேற்கொண்டு வருவதாகவும்  தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment