புதிய தேர்தல் ஆணையரை தேர்வு… பிரதமர் தலைமையில் கூட்டம்…!

தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே வரும் பிப்ரவரி 15ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதனால் 3 பேர் கொண்ட தேர்தல் குழுவில் ஒரு பதவி காலியாக உள்ளது. அனுப் சந்திர பாண்டேவுக்கு பதிலாக புதிய தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கான முதல் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க உள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023ன் கீழ் இந்த கூட்டம் நடத்தப்படும்.

புதிய தேர்தல் ஆணையர் தேர்ந்தெடுப்பது தொடர்பாக பிரதமர் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா , சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால மற்றும் மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு கூடி விவாதிக்க வாய்ப்புள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு பிரதமரின் இல்ல அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

ஸ்பெயினில் இருந்து இன்று சென்னை திரும்புகிறார் முதலமைச்சர்..!

தலைமை தேர்தல் ஆணையாளர் மற்றும் பிற தேர்தல் ஆணையாளர்கள் (நியமனம், சேவை மற்றும் பதவி காலத்திற்கான நிபந்தனைகள்) சட்டத்தின்படி சட்ட அமைச்சர் சார்பில் ஒரு தேடுதல் குழு அமைக்கப்படும். இந்த குழுவில் 2 மத்திய செயலாளர்கள் இருப்பார்கள், இவர்கள் 5 பேரை கொண்ட பட்டியலை தயாரித்து அந்த பட்டியலை பிரதமர் தலைமையிலான தேர்வு குழுவுக்கு அனுப்பி வைப்பார்கள்.

இந்த தேர்வு குழுவில், பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சர் ஒருவரும் மற்றும் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் இருப்பார்கள். இறுதி பட்டியலில் இல்லாத நபர்களையும் பரிசீலனை செய்யும் அதிகாரம் இந்த தேர்வு குழுவுக்கு உள்ளது.

author avatar
murugan

Leave a Comment