இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சிறுத்தை சிவா தம்பி.! வைரல் புகைப்படங்கள்.!!

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளர். 

தமிழ் சினிமாவில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவா- வின் தம்பியான இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான “வீரம்” படத்தில் அஜித்திற்கு தம்பியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இதனை தொடர்ந்து தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு அம்ருதா சுரேஷ் என்பரை திருமணம் செய்துகொண்டார், அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 2019-ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து கடந்த மாதம் கேரளாவை சேர்ந்த எலிசபெத் என்ற மருத்துவரை ரகசியமாக 2-வது திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் பரவி வந்தது. இது குறித்து அவர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில், இதனை உறுதி படுத்தும் வகையையில், தற்போது நடிகர் பாலா இரண்டாவது திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றுள்ளது. அதற்கான  புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.