#BREAKING : பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்…! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

#BREAKING : பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்…! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று  அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய முதல்வர், சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி, சமூகத்தில் சமூக நீதிக்கு வித்திட்டவர் தந்தை பெரியார். அவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள், யாரும் எழுத, பேச பயந்தவை என  தெரிவித்துள்ளார்.

மேலும், பெரியாரின் செயல்கள் குறித்து பேசவேண்டுமென்றால் 10 நாட்கள்  ஒத்திவைத்துவிட்டு தான் பேச வேண்டும். இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம். பெரியாரின் குருகுல பயிற்சி தான் திமுகவை உருவாக்கியது. செப்.17 சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும் என்றும், பெரியார் குறித்த இந்த அறிவிப்பை வெளியிடுவது எண்ணி தான் பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube