புதிய உலக சாதனை படைக்க 6 நாட்கள் நீருக்கடியில் இருந்த ஸ்கூபா மூழ்காளர்.!

எகிப்தில் ஒரு ஸ்கூபா மூழ்காளர் ஆறு நாட்கள் நீருக்கடியில் இருந்து  ஒரு புதிய உலக சாதனை படைத்துள்ளார். சதாம் அல் கிலானி நவம்பர் 5 ஆம் தேதி அன்று தஹாப் கடற்கரையில் நீருக்கடியில் சென்று 145 மணி 30 நிமிடங்கள்(அதாவது 6 நாள்கள்) கழித்து வெளியே வந்தார்.

2016 ஆம் ஆண்டில் சைப்ரஸில் செம் கராபே என்பவர் 142 மணி 74 நிமிடங்கள் நீருக்கடியில் இருந்தார். அதுவே  தற்போதைய உலக சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது சதாம் முறியடித்துள்ளார். 145 மணிநேரத்திற்கு அதிகமாக நீருக்கடியில்சதாம் இருந்தாலும்  கின்னஸ் உலக சாதனையாக இன்னும் மாற்றவில்லை.

முதலில் 150 மணி நேரம் நீருக்கடியில் இருக்க திட்டமிட்டிருந்தார், இருப்பினும், உடல்நலக் கவலைகள் காரணமாக நான்கரை மணி நேரத்திற்கு முன்பே அவர் நீருக்கடியில் இருந்து அவர் வெளியே வந்தார். சதாம் ஒரு நீச்சல் குளத்தில் தன் சோதனைகளை மேற்கொண்டார்.

நீருக்கடியில் சதாம் இருந்த பொது பல சிக்கல்கள் இருந்தாலும், அவர் சாதாரணமாக எல்லாவற்றையும் செய்தார், ஆனால் நீருக்கடியில் தூக்கம் மற்றும் சுவாசம் பற்றி கேட்டபோது, ​​தூங்கும் போது முழு முகமூடியைப் பயன்படுத்துவதால் அது எளிதாகிறது என்று கூறினார்.

author avatar
murugan

Leave a Comment