டெல்லியில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு…! – டெல்லி அரசு

டெல்லியில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு. 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த  வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் தொற்று பாதிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக மிகவும் தீவிரமாக இருந்த நிலையில், இதனை தடுக்க டெல்லி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது.

இந்த நிலையில் அங்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், செப்டம்பர் 8-ஆம் தேதி 6-ம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் செப்.1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.