பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசு பள்ளிகளில்  மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

பள்ளி மேலாண்மை குழு, இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி அரசுப் பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில்  மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இக்கூட்டத்தில் மாணவர் சேர்க்கை தக்கவைத்தல் குழு கற்றல் குழு கட்டமைப்பு குழு மேலாண்மை குழு என துணை குழுக்கள் உருவாக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment