மாணவிகளுக்கு ₹1,000 வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்!

அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டம், நாளை அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் 93 ஆயிரம் மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டில் பலன் பெற இருப்பதாக கூறப்படுகிறது. திட்டத்தின் துவக்க விழா, நாளை வட சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

இத்திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி அளிக்கும். 2022-23 பட்ஜெட் கூட்டத்தொடரில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், தமிழக அரசால், 698 கோடி ரூபாய் செலவில், இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.

author avatar
Dhivya Krishnamoorthy

Leave a Comment