SBI வங்கி 4 ஆண்டுகளுக்கு கழித்து சிபிஐயிடம் புகார்.! ரூ.400 கோடி வராக்கடன் வைத்த பிரபல நிறுவனம்.!

எஸ்பிஐ உள்ளிட்ட 6 வங்கிகளிடம் ரூ.400 கோடி கடன் வாங்கிய பாஸ்மதி அரிசி ஏற்றுமதி நிறுவனத்தின் மீது எஸ்பிஐ வங்கி சிபிஐயிடம் புகார் அளித்து வழக்குப்பதிவு.

டெல்லியை சேர்ந்த பாஸ்மதி அரிசி ஏற்றுமதி நிறுவனமான ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட் உரிமையாளர்கள் எஸ்பிஐ, கனரா, ஐடிபி, உள்ளிட்ட 6 வங்கிகளிடம் ரூ.411 கோடி கடன் வாங்கியுள்ளது. இதுதொடர்பான கடந்த 2016 ஆம் ஆண்டு கடன் வாங்கப்பட்ட நிலையில், 4 ஆண்டுகள் கழித்து பிப்ரவரி மாதம் எஸ்பிஐ வங்கி சிபிஐயிடம் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் நரேஷ்குமார், சுரேஷ்குமார் மற்றும் சங்கீதா உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு மோசடி மற்றும் ஊழல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு போடப்பட்டுள்ளது. வராக்கடன் வரையறுக்கப்பட்ட பின்னர், அந்நிறுவனத்தின் சொத்துகள் குறித்து கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆய்வு மேற்கொண்டதாகவும், அப்போதே அவர்கள் நாட்டைவிட்டு சென்றுவிட்டதாகவும் சிபிஐ புகாரில் கூறப்பட்டுள்ளது.

 பின்னர் கடன் வாங்கியவர்கள் நாட்டைவிட்டு செல்வதற்கு முன், எல்லா சொத்துக்களையும் விற்றுவிட்டால், கடனை திரும்ப வசூலிப்பதில் சாத்தியமில்லை என தெரிந்த பிறகு, எஸ்பிஐ வங்கி சிபிஐயை அணுகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்