1.5 கோடி மதிப்பிலான 80 ஆயிரம் முக கவசங்கள் இங்கிலாந்தில் திருடப்பட்டுள்ளது!

இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரின் புறநகர் பகுதி சல்போர்ட்டில் உள்ள மருத்துவ குடோனிலிருந்த 80 ஆயிரம் முக கவசங்கள் 3 மர்ம நபர்களால் திருட்டு. 

இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம்  மிகவும் அதிகமாக  உள்ளது. இதுவரை 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டு மக்கள் தனி மனித இடைவெளி, முக கவசங்கள் மற்றும் சோப்புகள் ஆகியவை அத்தியாவசியமான பொருள்களாக உபயோகித்து வருகின்றனர். 

இந்நிலையில், தற்பொழுது இங்கிலாந்தின் முக்கியமான மான்செஸ்டரின் புறநகர் பகுதி சல்போர்ட்டில் உள்ள மருத்துவ குடோனில் 1.5 கோடி இந்திய பண மதிப்புக்கு தயாரிக்கப்பட்டிருந்த 80 ஆயிரம் முக கவசங்கள் திருடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 3 வேன்களில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் தான் இந்த திருட்டை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தில் ஏற்கனவே கொரோனா தொற்று அதிகம் உள்ளதால், சுகாதார சேவை பணியாளர்களுக்கு தேவைப்படும் சுய பாதுகாப்பு உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், பலத்த பாதுகாப்பு நிறைந்த பகுதியில் இந்த திருட்டு சம்பவம் நடந்திருப்பது அந்த பகுதி மக்களுக்கும், போலீசாருக்கும் பெரிய சவாலாக உள்ளது. 

 

author avatar
Rebekal