இனி சவுதி பெண்கள் ‘இவர்கள்’ அனுமதி இல்லாமலும் வெளிநாடு செல்லலாம் !

சவுதி அரேபியாவில் உள்ள பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அரசு 2030 விஷன் என்ற பெயரில் சவுதியை நவீனமாகமாக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

Image result for சவுதி பெண்கள்

இதற்காக சவுதி அரேபியாவில் 40 வருடங்கள் கழித்து திரையரங்கம் திறக்கப்பட்டது.மேலும் பெண்கள் வாகனம் ஒட்டவும் , செய்தி வாசிக்கவும் அனுமதி கொடுக்கப்பட்டது.இது போன்ற விஷயங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் சவுதியில் உள்ள பெண்கள் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் கணவன்,தந்தை அல்லது குடும்பத்தில் உள்ள ஒரு ஆண்களிடம் அனுமதி பெற்ற பிறகே செல்ல வேண்டும் கட்டுப்பாடு இருந்தது.

சமீபத்தில் சவுதியில் உள்ள இளம் பெண்கள் கனடா , ஆஸ்திரேலியாவிற்கு அடைக்கலம் நாடி சென்றனர்.இதனால் இந்த விதிக்கு சர்வேதேச கடும் விமர்சனங்கள் எழுந்தது.மேலும் இந்த கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என கோரியும் எழுந்தது.

இந்நிலையில்  சவுதி அரேபியா அரசு அந்த கட்டுப்பாட்டை நீக்கி உள்ளது.மேலும் 21 வயதை கடந்த பெண்கள் ஆண்கள் அனுமதி இல்லாமல் பாஸ் போர்ட் பெற்றுக்கொள்ளவும் , வெளிநாட்டிற்கு செல்லவும் அனுமதித்து உள்ளது.

author avatar
murugan