ஒரே வருசத்தில 27 படத்தில் வில்லன்!! பஞ்சகாலத்தில் ஹீரோவாக மாறிய சத்யராஜ்.!

Sathyaraj: அந்த காலகட்டத்தில் ரஜினிக்கு எல்லாம் வில்லனாக நடித்தவர் நடிகர் சத்யராஜ், அப்போது பலருக்கும் வில்லனாக நடித்து பட்டைய கிளப்பினார் என்றே சொல்லலாம். அதிலும், இயக்குனர் மணிவண்ணனுடைய நூறாவது நாள் படம் நடிகர் சத்யராஜின் கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றே சொல்லலாம்.

READ MORE – 3 வருஷமா வாய்ப்பு கேட்டேன்! பாக்யராஜ் கண்டுக்கவே இல்லை…பிரபல நடிகர் வேதனை!

இப்படி இருக்கையில் அண்மையில் ஒரு மேடை ஒன்றில் வெளிப்படையாக தான் வில்லனாக நடிப்பது குறித்து பல படங்களை கிண்டல் செய்து இருப்பதாகவும் ஒப்பனாக பேசினார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ‘நான் சத்யராஜாக இருப்பதற்கு ஒரே காரணம் மணிவண்ணன் சார் தான். பல பேர்ல அவர் ஒருத்தர் இல்லை அவர் ஒரே ஆள் தான் காரணம். அதாவது ‘நூறாவது நாள்’ படத்துல 24 மணி நேரத்துல என்னை வில்லனாக்கிய மணிவண்ணன்.

READ MORE – நண்பர் அம்மாவின் இறந்த செய்தி…500 காரில் வந்த விஜயகாந்த்! ஸ்தம்பித்து போன காவல் துறை!

இந்த படத்துக்கு பின், அடுத்த ஒரு வருடத்தில் 27 படத்துல வில்லனாக நடித்தேன். அப்போ உள்ள சத்யராஜே பார்க்கவே முடியாது. அப்போது எனக்கு பொறுப்பே கிடையாது பொறுப்பில்லாதவன், அப்போ ஒரு படத்தில் வில்லனாக நடிக்கும் போது இந்த படத்தை எல்லாம் நான் நடிக்கணுமா அப்படின்னு நக்கலாக பேசுவேன்.

READ MORE – நீங்க தான் ‘மேஸ்ட்ரோ’! ஏ.ஆர்.ரஹ்மானை புகழ்ந்த செல்வராகவன்!

என்ன எழவு படும் இது அப்படின்னு கிண்டலாக பேசுவேன். சரி நமக்கு நடிச்ச காசு வருது, அது இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே உள்ள விவகாரம் அப்படின்னு சொல்லிட்டு ஜாலியா நடிச்சிடுவேன். ஒரு காலத்தில் ஹீரோகளுக்கு பஞ்சம் வருது, பாரதிராஜா சார்  காலகட்டத்தில் நிறைய ஹீரோவாக்கள் வந்தார்கள்.

அப்புறம் அவர்கள் எல்லாம் காலாவதியானார்கள், அதன் பின் என்னை கம்பெல் சரியாக ஹீரோவாக நடிக்க சொல்லி சொன்னாங்க. அதன் பின் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தவர் தான் நான் என்று சத்யராஜ் கூறிஉள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.