சாத்தான்குளம் விவகாரம் : 2 மணி நேரம் பென்னிக்ஸ்-ஜெயராஜ் இல்லத்தில் விசாரணை

பென்னிக்ஸ்-ஜெயராஜ் இல்லத்தில் இரண்டு மணி நேரம் விசாரணை.

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் இருவரும் காவலர்களால் சிறையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பான போலீசாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக,  சாமதுரை, செல்லத்துரை, வெயிலுமுத்து ஆகிய மூன்று பேரை காவலில் எடுத்துள்ள சிபிஐ அதிகாரிகள் அவர்களை சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து 4 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இல்லத்தில் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தினர். அப்போது ஜெயராஜின் உறவினர்களான தாவீது மற்றும் தேசிங்கு ராஜா ஆகியோரிடமும் விசாரணை நடத்தி, எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெற்றனர்.  மேலும், சாத்தான்குளம் காவல் நிலைய எழுத்தர் பியூலாவிடமும் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.