அடுத்த வருடம் ஜனவரி மாதம் விடுதலையாகிறார் சசிகலா – சிறை நிர்வாகம் தகவல்

சிறையில் உள்ள சசிகலா 2021 -ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாகிறார் என்று சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  சசிகலாவிற்கு   சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் . சில நாள்களுக்கு முன் கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை சிறையில் இருந்து சில மாதங்களில் விடுதலை செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு சிறைத்துறை இயக்குனர் மெக்ரித், சசிகலாவிற்கு நன்னடத்தை விதிமுறைகள் கிடையாது தண்டனை முழுவதும் அனுபவித்த பின்புதான் சசிகலா விடுதலை ஆவார் என கூறினார்.

இதனைத்தொடர்ந்து சசிகலாவை அதிமுகவில் இணைவது குறித்து பல கருத்துக்கள் வெளியாகி வருகின்றனர். அதில் அதிமுகவினர் சிலர் சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்ள மாட்டோம் எனவும், சிலர் அதை பற்றி தலைமைதான் முடிவு செய்யும் என கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தான் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலா விடுதலை குறித்து சிறை நிர்வாகத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சிறை நிர்வாகம்,சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா 2021 -ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாகிறார் என்று தெரிவித்துள்ளது. அபராதத்தொகை ரூ.10 கோடியை கட்டாவிடில் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி  27-ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று சிறை நிர்வாகம் பதில் தெரிவித்துள்ளது.