சங்கடத்தில் சர்கார் :கதை திருட்டு உண்மை தான்……திரைபட எழுத்தாளர் சங்கம் அறிக்கையில் பரபரப்பு…….கலத்தில் படக்குழு…!!!

செங்கோல் திரைகதையும்,சர்கார் திரைகதையும் ஒன்று தான் என்று திரைப்பட எழுத்தாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Image result for SARKAR
நடிகர் விஜய் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் நடிகை கீர்த்திசுரேஷ் நடிகை வரலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளாராக ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார் அதிரடி கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார் இந்த படத்தினை சன்பீக்சர்ஸ் தயாரித்து தீபாவளிக்கு வெளியிட தயார் நிலையில் உள்ளது.

 
படம் பற்றி எதிர்பார்ப்பு குறித்து தயாரிப்பு நிறுவனமான சன்பீக்சர்ஸ் ஃபஸ்ட் லுக்,டீசர்,இசை வெளியீட்டு விழா  என்று கொழுத்தி விட்டது.இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜயின் கம்முன்னு உம்முன்னு இருந்தலே வாழ்க்க ஜாம்முனு இருக்கும் என்று மாஸாக கூறிய விஜய் மாநில ஆட்சி பற்றியும் பதிலை தெறிக்கவிட்ட விஜய் அரசியல் குறித்து அதிரடியாக பேசியதை ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பையும்,அரசியலில் அதிர்வையும் ஏற்படுத்தியது.

இந்த மாஸ் பேச்சுக்கு பிறகு தான் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.டீசர் அடித்து நொறுக்கும் வசனத்தில் அரசியல்வாதிகள் அனைவரையும் அடித்து தூக்கியது.விஜயின் ஐம் ஏ கார்ப்ரேட் கீரிமினல் வசனம் தெறிக்கவிட்டது என்றே சொல்லலாம்.இந்த டீசர் உலக அளவில் ஹோலிவூட் படத்தின் டீசர் சாதனையே முறியடித்ததுன பாத்துக்கோங்க மரண மாஸ் படத்துக்கு இப்படி போய் கொண்டிருந்த சர்கார் சங்கடத்தில் மாட்டிக்கொண்டது.
Image result for திரைபட எழுத்தாளர் சங்கம் அலுவலகம்
சர்கார் என்னுடைய கதை என்று வருன் என்கிற ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தார் இதனை விசாரித்த நீதிமன்றம் தயாரிப்பு நிறுவனம் மற்றும் திரைப்பட எழுத்தாளர் சங்கம் ஆக்.30 க்குள் பதிகளிக்க உத்தரவிட்டது  குறிப்பிடத்தக்கது.மேலும் இது குறித்து வருன் (எ) ராஜேந்திரன் தெரிவிக்கையில்  செங்கோல் என்ற தலைப்பிலான என் கதையை சர்கார் என்று தலைப்பு வைத்து பட எடுக்கப்பட்டுள்ளது.இது முழுக்க என் கதை என்றும் தெரிவித்தார்.
Related image
இந்நிலையில் இவருடைய செங்கோல் கதையும் சர்கார் கதையும் ஒன்று தான் என்று திரைப்பட எழுத்தாளர் சங்கம் உறுதி செய்துள்ளது.இயக்குநரும் நடிகருமான கே.பாக்கியராஜ் தலைவராக உள்ள திரைபட எழுத்தாளர் சங்கம் வருன் ராஜேந்திரனுக்கு அனுப்பிய கடிதத்தில் தங்கள் பக்கம் உள்ள நியாத்திற்காக நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதை நாங்கள் தடை செய்ய மாட்டோம் என்று தெரிவித்தார் மேலும் முழுவதுமாக உதவாதநிலைமைக்கு வருந்துகிறோம் என்று தெரிவித்தார்.இந்த முடிவால் படக்குழுவினர் கலக்கத்தில் உள்ளதாக சினி வட்டாரங்கள் தகவல்களை கசிந்துவிடுகின்றன.

DINASUVADU
 

author avatar
kavitha

Leave a Comment