பத்த வச்சு பாக்ஸ் ஆபிஸை பறக்கவிட்ட “சர்தார்”.! தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

மக்கள் அனைவரும் கார்த்தி நடிப்பில் வெளியான ” சர்தார்” திரைப்படத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். படம் மிகவும் அருமையாக இருப்பதால் படத்திற்கான வரவேற்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ளார்.

படத்தில் கார்த்தியுடன் லைலா, ராசி கண்ணா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்களேன்- இதுதான் தீபாவளி ஸ்பெஷல்: ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்த நடிகைகள்.! 

இந்த திரைப்படம் கடந்த 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியானதிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலையும் குவித்து வருகிறது. இதனையடுத்து, படம் தற்போது வரை தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதற்கான தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, இந்த திரைப்படம் வெளியான 4 நாட்களில் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 20 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று தீபாவளி என்பதால் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. வரும் நாட்களில் படத்திற்கான வசூல் இன்னும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment