சீனாவின் அச்சுறுத்தல்களில் இருந்து தைவானை பாதுகாப்போம்.! புதிய ஜனாதிபதி பேச்சு.!

சீனாவின் ஆதிக்கத்தில் இருந்துகொண்டு தனி நாடாக அங்கீகரிக்க தவித்து வரும் தைவானில், சீனாவின் எதிர்ப்பையும் மீறி நேற்று ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வெறும் 14 நாடுகள் மட்டுமே தைவானை தனி நாடாக அங்கீகரித்து உள்ளது. சீனாவின் ஆதிக்கத்தால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பிரதான நாடுகள் கூட தைவானை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. இருந்தாலும், அரசியல் மற்றும் ராணுவ ரீதியாக கைவானுக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கி வருகிறது.

காதலரை கரம் பிடித்தார் நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தா!

இந்த சூழலில் நேற்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று மாலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், அமெரிக்க ஆதரவு கொண்ட ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் துணை அதிபராக பொறுப்பில் இருந்த லாய் சிங் டி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான சீன ஆதரவு கொண்ட குவோமின்டாங் கட்சி சார்பில் ஹவ் யு போட்டியிட்டனர்.

தைவானில் மொத்தம் 1.9 கோடி வாக்காளர்கள் உள்ளனர். நேற்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், ஒட்டுமொத்தமாக 70% வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே ஜனநாயக முற்போக்கு கட்சியை வேட்பாளர் முன்னிலையில் இருந்தார். இறுதி வாக்கு எண்ணிக்கையில் 53.7 சதவீத வாக்குகளை பெற்று லாய் சிங் டி வெற்றி பெற்றார். ஹாவ்யு 44.59 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றார்.

இந்தச் சூழலில் நேற்று சீன பாதுகாப்புத்துறை இந்த தேர்தல் குறித்து ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டு இருந்தது. அதில், தைவான் விவகாரத்தில் சீன மக்கள் விடுதலை படை எதற்கும் தயார் நிலையில் உள்ளது. தைவானை சுதந்திர நாடாக அறிவிக்க முயன்றால் அந்த முயற்சியை நாங்கள் முறியடிப்போம் என்று எச்சரிக்கை விடுத்தது. இந்த எச்சரிக்கையும் மீறி நேற்று தேர்தல் நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட்டது.

வெற்றி அறிவிக்கப்பட்ட பின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற லாய் சிங் டி பேசுகையில், சீனாவால் இப்போது தைவானை தனி நாடாக அங்கீகரிக்க முடியும். நமது ஜனநாயக மற்றும் சுதந்திரமான அரசியலமைப்பின்படி சமநிலையை பாதுகாக்கும் வகையில் நான் செயல்படுவேன். அதே நேரத்தில், சீனாவின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களிலிருந்து தைவானை பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

எதிர்காலத்தில், சீனா, தைவானின் சூழ்நிலையை அங்கீகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், தைவான் – சீனா என இரு தரப்பினருக்கும் அமைதி ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுப்போம் என புதிய ஜனாதிபதி லாய் சிங் டி வெற்றிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.