சதாம் உசேன் விற்பனைக்கு.! ஆன்லைனில் பிரபல நிறுவனம் விளம்பரம் – விலை 20 டாலர் தானாம்.!

சதாம் உசேனுக்கு 20 டாலர் என்ற விலை நிர்ணயித்து பிரபல நிறுவனம் ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது, முன்னாள் ஈராக்கிய அதிபர் சதாம் உசேனை Wish என்ற ஆன்லைன் விற்பனை தளத்தில் 20 டாலருக்கு விற்கப்படுவார் என்ற விளம்பரம் வெளியானது. அந்த விளம்பரத்தின் ஸ்கிரீன் ஷாட்களை பலர் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். விஷ் விற்கப்படும் மிகவும் மலிவான பொருட்களை அனுபவிக்கவும். 60-80% OFF ஸ்டோர் விலையை தவறவிடாதீர்கள் என்றும் விளம்பரத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் காரணமாக ட்விட்டரில் சதாம் உசேன் என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகியது.

இதுகுறித்து பதிவிட்டுள்ள பயனாளர் ஒருவர், 20 டாலருக்கு சதாம் உசேனை யார் வாங்க விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மற்றோருவர், 28% தள்ளுபடி விலையுடன் யாராவது சதாம் உசேனை வாங்க விரும்புகிறீர்களா என்று கேள்வி எழுப்பியுளார். இதே போல் பலரும் ட்விட்டரில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதில், சுவாரசியம் என்னவென்றால் 10 க்கும் மேற்பட்டோர் அதனை வாங்கியுள்ளனர் என்பது தான். உண்மையில் சதாம் உசேனின் விளம்பரம் (fine art print) க்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மேலும், இரண்டு அளவுகளில் புகைப்படம் அச்சு கிடைக்கின்றன.

முன்னாள் ஈராக்கிய தலைவர் சதாம் உசேன் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து பிரீமியம் ஹெவி ஸ்டாக் பேப்பரில் மீண்டும் உருவாக்கப்பட்டது. இது அசலின் தெளிவான வண்ணங்கள் மற்றும் விவரங்கள் அனைத்தையும் கொண்டுள்ளது. இந்த புகைப்படம் அச்சு தொங்கவிட அல்லது ஃப்ரேம் செய்யும் வகையில் உள்ளது என்று அதற்கான விளக்கத்தில் கூறியுள்ளனர். இந்த மாத தொடக்கத்தில், இந்திய விமானப்படை, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்திற்கு பரிசளித்த கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட மிக்-23 போர் விமானம், ஓஎல்எக்ஸ் நிறுவனத்தில் ரூ.9.99 கோடி விலையில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்