ஆசிரியர் வேலைக்கான விண்ணப்பத்தில் சச்சினின் மகன் எம்.எஸ். தோனி .., குழம்பிய அதிகாரிகள்..!

சத்தீஸ்கரில் ஆங்கில ஆசிரியர்களின் வேலை விண்ணப்பத்தில் சச்சினின் மகன் எம்.எஸ். தோனி என பெயர் இடம்பெற்றுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டுகளில் சில நேரங்களில் பெயர்கள் சரியாக இருக்கும் புகைப்படங்கள் வேறு ஒருவரின் புகைப்படம் இருக்கும். இவை அந்தந்த அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் செய்த தவறுகளால் ஏற்படுகின்றன. அத்தகையவர்களுக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதை நாம் பார்த்திருப்போம்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, போலி பெயர்களில் விண்ணப்பிக்கும் செயல்முறையும் தொடங்கி வருகிறது. சில நேரங்களில் யாரோ ஒரு நடிகர் மற்றும்  நடிகையின் பெயரில் விண்ணப்பிக்கிறார்கள். இந்நிலையில், சத்தீஸ்கரில் இதுபோன்ற ஒரு விசித்திரமான சம்பவம் வெளிவந்துள்ளது. சத்தீஸ்கரில் உள்ள ஆங்கில ஆசிரியர் வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பலர் விண்ணப்பித்து இருந்தனர்.

அவர்களில் 15 விண்ணப்பதாரர்கள் நேற்று நேர்காணல் செய்யப்பட இருந்தனர். அந்த விண்ணப்பதாரர்கள் பட்டியலை ஆராய்ந்தபோது, ​​முன்னாள் அணி இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனியும்  பெயர் இருந்ததை அதிகாரிகள் பார்த்தனர். இது மட்டுமல்லாமல், விண்ணப்பதாரர் தோனியின் தந்தையின் பெயர் சச்சின் டெண்டுல்கர் என இருந்தது.

அத்தகைய சூழ்நிலையில், அதிகாரிகள் சந்தேகம் அடைந்து விண்ணப்பத்தில் இருந்த  தொலைபேசி எண்ணை அழைக்க முயற்சி செய்தபோது, தொடர்பு கொள்ள முடியவில்லை. இதன் மூலம் தோனி, சச்சின் என்ற பெயரில் ஆசிரியர் பதவிக்கு யாரோ ஒருவர் விண்ணப்பித்திருப்பது தெரியவந்தது. பின்னர், போலி விண்ணப்பதாரருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நேர்காணல் பட்டியல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிகாரிகள் பட்டியலை உருவாக்கும் போது அது போலியானது என்று தெரியவில்லை..? இதுபோன்ற நேரத்தில் அவர் எவ்வாறு நேர்காணல்களுக்கு தேர்வு செய்யப்பட்டார்..?  என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

author avatar
murugan