ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் மனு விசாரணை .!

மாநில சட்டசபை சபாநாயகர் சி.பி. ஜோஷி வழங்கிய தகுதிநீக்க நோட்டீஸ்களுக்கு எதிராக சச்சின் பைலட்  மற்றும் 18 அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,  சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது வருகின்ற செவ்வாய்க்கிழமை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று சச்சின் பைலட்  மற்றும் 18 அதிருப்தி எம்எல்ஏக்கள் அளித்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தனது வாதங்களை மீண்டும் தொடங்குகிறார். மூத்த ஆலோசகர் ஹரிஷ் சால்வே மற்றும் முகுல் ரோஹ்தகி ஆகியோர் தங்கள் வாதங்களை நிறைவு செய்துள்ளனர்.

ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளத் தவறியதாக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ் தொடர்பாக செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி வரை நடவடிக்கை எடுக்கமாட்டேன் என்று சபாநாயகர் ஜோஷி வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

author avatar
murugan