திறக்கப்படுகிறது நடை…அய்யனை காண அலைமோதும் பக்தர்கள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பிறப்பையொட்டி மாசி மாத பூஜைக்காக வரும் 13 ம் தேதி நடைத் திறக்கப்படுகிறது.

கேரள மாநிலத்தில் பந்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுவாமி சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது.தை முடிவடைய உள்ளது.அடுத்து மாசி மாத பிறப்பையொட்டி மாசி மாத பூஜைக்காக அய்யனின் நடை வரும் 13 ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.

Image result for சபரிமலை அய்யப்பன் நடை

இந்நிகழ்வினை தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி கோவில் நடையை திறந்து தீபாராதனை காட்டுவார். திறக்கப்பட்ட அன்றே மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது ,அய்யனை காணவரும் பக்தர்களின் தரிசனத்திற்கு பின்னர் இரவு 10.30 மணிக்கு நடை  சற்றப்பட்டு. மறுநாள் காலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். பிப்.,14 முதல் பிப்., 18 வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

Image result for சபரிமலை அய்யப்பன் நடை

இந்த தினத்தில் தொடர்ந்து அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் ஆனது அய்யனுக்கு நடைபெறும். வழக்கமான பூஜைகளோடு தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜையும், உதயாஸ்தமன பூஜையும் நடைபெறும். பின்னர் பிப்., 18 ம் தேதி அன்று இரவு நடை அத்தாழ பூஜைக்கு பின் நடை அடைக்கப்படும்.

Image result for சபரிமலை அய்யப்பன் நடை

இந்நிலையில் மகரபூஜைக்கு பின்னர் சபரிமலை கோவில் நடை திறப்பை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகளவில் இருக்கும் என்பதால் அவர்களின் வசதிக்காக திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், ஆலப்புழா ஆகிய நகரங்களில் இருந்து பம்பைக்கு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில்  கூறப்படுகிறது

author avatar
kavitha