நடிப்புக்கு லீவு விட்டாச்சு..இயக்குனராக களமிரங்கியச்சு..நடிகை ரம்யா நம்பீசன் அதிரடி

நடிகை,பாடகர், என்று அசத்தி வந்த நடிகை ரம்யா நம்பீசன் தற்போது இயக்குநராகி உள்ளார்.

தமிழில் ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், , பீட்சா, இளைஞன், குள்ளநரி கூட்டம், ரெண்டாவது படம், சேதுபதி, சீதக்காதி போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா நம்பீசன். அதே போல் மலையாள பட உலகிலும் முன்னணி நடிகையாக வலம்  வருபவர். தற்போது நடிகர் விஜய் ஆண்டனியுடன் தமிழரசன் மற்றும் நடிகர் ரியோவோடு பிளான் பண்ணி பண்ணனும் போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

நடிப்பை தாண்டி பாடல் பாடுவதிலும் ஆர்வம் கொண்டவர்.தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்து அசத்தியுள்ளார். அன்ஹைட் என்கிற குறும்படம் ஒன்றை அவர் இயக்கி உள்ளார். இந்த படமானது காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூற்ப்படுகிறது. இக்குறும்படத்தை காதல் தினமான  பிப்ரவரி 14ந் தேதி வெளியிட உள்ளார்.

author avatar
kavitha