ரஷ்யாவின் ராக்கெட் உக்ரைன் மக்களை தாக்குகிறது – எலான் மஸ்க்கிடம் உதவியை நாடிய உக்ரைன்!

உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு துணை அதிபர் எலான் மஸ்க்கிடம் உதவி கோரினார். 

உக்ரைன் மீது தொடர்ந்து 4வது நாளாக ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தங்களுக்கு உதவுமாறு உலக நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்து வருகிறது. அதன்படி, உக்ரைன் பிரதமரின் கோரிக்கை ஏற்று அமெரிக்கா, பிரான்ஸ், சுவீடன் உள்ளிட்ட பல நாடுகள் ஆயுதங்கள் மற்றும் ராணுவ நிதி உதவிகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் துணை பிரதமரும், டிஜிட்டல் உருமாற்றம் அமைச்சருமான Mykhailo Fedorov, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்கிடம் உதவி கோரியுள்ளார். எலான் மஸ்க், நீங்கள் செவ்வாய் கிரகத்தில் குடியேற்ற முயற்சிக்கும்போது, ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது.

ஸ்பேஸ் X நிறுவனத்தின் செயற்கைக்கோள் வெற்றிகரமாக வானில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இங்கு ரஷ்யாவின் ராக்கெட் உக்ரைன் மக்களை தாக்குகிறது. எங்களுக்கு ‘ஸ்டார்லிங்க்’ மூலம் இணைய சேவை வழங்கி ரஷ்யாவை எதிர்க்க துணை நிள்ளுங்கள் என Mykhailo Fedorov ட்விட்டர் வாயிலாக மஸ்க்கிடம் உதவி கோரியுள்ளார். இதற்கு பதிலளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் சேவை இப்போது உக்ரைனில் செயல் பட துவங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மறுபுறம் உக்ரைன் மீது முழு நடவடிக்கை எடுக்க ரஷ்யா அதிபர் உத்தரவிட்டிருந்தார். இதனால் உக்ரைனை சுற்றிவளைத்து ரஷ்யா படைகள் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கி வருகிறது. தலைநகர் கீவ்-ஐ ரஷ்யா படைகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது. மேலும் உக்ரன் நாட்டில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்